செய்திகள் :

Soori: 'ஒரு ‘வியூ’க்காக தயவு செய்து இப்படி பண்ணாதீங்க...' - மக்களுக்கு சூரி வைத்த வேண்டுகோள் என்ன?

post image

சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'மாமன்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டாம் எனவும், நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம் என்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

‘மாமன்!'

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.

ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.

ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்… அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன.

இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு ‘வியூ’க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.

எனவே என் பணிவான வேண்டுகோள்:

திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

️ திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்.

உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது.

நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம்" என்று பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Simbu: `நீங்கள் யார்-னு கேட்டுட்டாரு; அதை மறக்கவே முடியாது' - கோலி பற்றி சுவரஸ்யம் பகிர்ந்த சிம்பு

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திர... மேலும் பார்க்க

Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் ‘பராசக்தி’ படம் உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் சமீபத்திய... மேலும் பார்க்க

Tourist Family: `எப்படி விவரிப்பது; நன்றியுணர்வில் அழுகிறேன்..'- சூர்யா சந்திப்பு பற்றி இயக்குநர்!

சசிக்குமார் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள 25 வயதேயான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெ... மேலும் பார்க்க

ஆகக்கடவன விமர்சனம்: பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்; புதுமுகங்களின் முயற்சி எப்படி?

மூன்று நண்பர்கள் ஒரு மெடிக்கல் கடையில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்... மேலும் பார்க்க

Trisha: 'கமல் சார் என்னுடைய வழிகாட்டி, மணி சார்...'- பணியாற்றிய அனுபவம் குறித்து த்ரிஷா

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தி... மேலும் பார்க்க