செய்திகள் :

Trisha: 'கமல் சார் என்னுடைய வழிகாட்டி, மணி சார்...'- பணியாற்றிய அனுபவம் குறித்து த்ரிஷா

post image

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

‘தக் லைப்’ படக்குழு
‘தக் லைப்’ படக்குழு

இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த த்ரிஷா, “சிம்புவையும், கமல் சாரையும் எனக்கு பல வருடங்களாக தெரியும். அதனால் அவர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிவதற்கு எளிமை இருந்தது.

என் சினிமாப் பயணத்தில் கமல் சார் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார். சிம்புவுடன் இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். (அலை, விண்ணைத்தாண்டி வருவாயா).

இந்தப் படப்பிடிப்பு தளம் ஒரு பாதுகாப்பு தளமாக இருந்தது. மணி சார் உட்பட எல்லாருடனும் ஒரு சௌகரியமான நட்பை உருவாக்கி வைத்திருந்தேன்.

‘ஆயுத எழுத்து’ படத்திற்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது மணி சாரை இன்னும் புரிந்துகொள்ள எளிதாக இருந்தது.

த்ரிஷா
த்ரிஷா

சிறப்பான பயிற்சியை அவரிடம் இருந்து பெற்றிருக்கிறேன். அவருடன் திரும்ப திரும்ப பணியாற்றுவது ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவரிடம் எதை, எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Tourist Family: `எப்படி விவரிப்பது; நன்றியுணர்வில் அழுகிறேன்..'- சூர்யா சந்திப்பு பற்றி இயக்குநர்!

சசிக்குமார் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள 25 வயதேயான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெ... மேலும் பார்க்க

ஆகக்கடவன விமர்சனம்: பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்; புதுமுகங்களின் முயற்சி எப்படி?

மூன்று நண்பர்கள் ஒரு மெடிக்கல் கடையில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்... மேலும் பார்க்க

Ace Review: மலேசியாவில் ரகளை செய்யும் விஜய் சேதுபதி - யோகி பாபு; இந்த ஆட்டம் எப்படி?

தனது குற்றப் பின்னணியை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). அங்கே, தொழிலதிபராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் யோகி பாபு (அறிவு) அவரைத் தனது நண்பனின் உறவினராக அ... மேலும் பார்க்க

Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகிழ்ந்த ராகுல் தேவ்

அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.அஜித்தின் ‘வேதாளம்’, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ராகுல் தேவ் வில்லனாக ந... மேலும் பார்க்க