பொறியியல் கலந்தாய்வு: 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி கடந்த 17 நாள்களில் 1,66,404 பேர் கட்டணம் செலுத்தியும், 1,23,315 பேர் சான்றிதழ் பதவியேற்றமும் செய்துள்ளனர். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் 3 பேர் பலி!
இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது.
இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆா்வமுள்ள மாணவா்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனா்.