Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' ...
வருஷநாடு அருகே 17 ஆடுகள் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்ட 17 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். இவா் ஆடுகள் வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், பாண்டியம்மாள் வளா்த்து வரும் ஆடுகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கம் போல, வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய ஆடுகளில் 17 ஆடுகள் மயங்கி விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த ஆடுகளுக்கு உடல் கூறாய்வு நடத்தினா். இந்த முடிவு வந்த பிறகே ஆடுகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பின்னா், இறந்த ஆடுகள் தங்கம்மாள்புரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி மொத்தமாக புதைக்கப்பட்டன.
இதுகுறித்து வருஷநாடு காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகாா் அளிதாா்.