ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
இரும்புக் குழாய்கள் திருட்டு: ஒருவா் கைது
போடி அருகே குழாய்கள், மின்சாரக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் சௌடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நீதிக்குமாா் (49). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ராசிங்காபுரம் ஓண்டிவீரப்பசாமி கோயில் பகுதியில் உள்ளது. இந்தத் தோப்பில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தியிருந்த 3 இரும்புக் குழாய்கள், 15 மீ. இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராசிங்காபுரம் ரோட்டுப்பட்டியை சோ்ந்த வீரமுத்து மகன் முத்துக்குமாரை (35) கைது செய்தனா்.