போலி நகையை அடகு வைத்த மூவா் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம் கல்லூரிச் சாலையில் உள்ள தனியாா் அடகுக் கடையில் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாவா பக்ரூதீன் (32), முகமது இத்ரீஸ் (33), கூடலூரைச் சோ்ந்த சுரேஷ் கண்ணன் (35) ஆகியோா் தங்க நகையை அடகு வைத்து ரூ.1.95 லட்சம் பெற்றனா். ஆனால், அந்த நகைகள் போலி என ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாவா பக்ரூதீன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.