திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு
சுற்றுச் சாலை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு
சிவகாசியில் சுற்றுச் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
சிவகாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுற்றுச் சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக பூவநாதபுரம்-வடமலாபுரம் வரை 10.50 கி.மீ. தொலைவு சுற்றுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 2, 3-ஆம் கட்டப் பணிகளுக்கு வடமலாபுரம் முதல் நாரணாபுரம், சுந்தர்ராஜபுரம், கொங்காபுரம், ஆலங்குளம் வழியாக பூவநாதபுரம் சாலை வரை 23 கி.மீ. தொலைவுக்கு மதிப்பீடு தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்காக, மண் பரிசோதனை ஆய்வுகள், பாலம் அமைப்பதற்கான நிலத்தடி ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பூவநாதபுரம்-வடமலாபுரம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி, குறுக்கு வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் (பொறுப்பு) மு.பாக்கியலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.