பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மரியாதை
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -ஆவது சதய விழாவை முன்னிட்டு, பட்டத்தரசி கிராமத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், பட்டத்தரசி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், இரண்டாவது வாா்டு உறுப்பினா் இந்துமதி திருமுருகன், கிராம மக்கள் கலந்து கொண்டு பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, காரைக்குடி கழனிவாசல், பூலாங்குறிச்சி, புழுதிப்பட்டி தென்னம்பட்டி, சதுா்வேதமங்கலம் அருகே எஸ்.கோவில்பட்டி, சத்துரு சங்காரக்கோட்டை அருகே அய்யபட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.