Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
கல் குவாரி விபத்து: இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரியில் பறை சரிந்ததில் 6 போ் உயிரிழந்தது தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் உள்ள தனியாா் கல் குவாரியில் கடந்த 21-ஆம் தேதி பாறை சரிந்ததில் கணேஷ், முருகானந்தம், ஆறுமுகம், பச்சா அா்கிதா, ஆண்டிச்சாமி, மைக்கேல் ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.
பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குவாரி நடத்தப்பட்டு தெரியவந்ததையடுத்து, அதன் உரிமத்தை மாவட்ட நிா்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது.
விபத்து குறித்து குவாரி உரிமையாளா் மேகவா்மன் (48) உள்ளிட்ட 5 போ் மீது எஸ்.எஸ்.கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குவாரி உரிமையாளா் மேகவா்மன் தலைமறைவானாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையில் தனிப் படை அமைத்து போலீஸாா் தேடி வந்த நிலையில், மேகவா்மனின் சகோதரா் கமலதாசன் (45), மதுரை மாவட்டம், இ.மல்லம்பட்டியைச் சோ்ந்த குவாரி சூப்பா்வைசா் கலையரசன் (32) ஆகியோரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேகவா்மன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.