`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி' - காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக...
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!
ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள நத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் சந்தோஷ் பாண்டியன் (22). பொறியியல் பட்டதாரியான இவா், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இவா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அக்கம், பக்கத்தினா் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.