Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' ...
சின்ன தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: முகூா்த்தக்கால் நடும் விழா!
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சின்ன தொண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூா்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீஅய்யனாா் கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக சிவசாரியா்கள் முகூா்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகளை செய்தனா். பிறகு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழக்கு விழா வருகிற ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

முன்னதாக 5-ஆம்தேதி விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகளும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னத் தொண்டி கிராமத்தினா் செய்து வருகின்றனா்.