Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
வடுகபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி
கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வடுகபட்டி கிராமத்தில் உள்ள குங்கும காளியம்மன் கோயில், செல்வவிநாயகா், சுந்தரராஜப் பெருமாள் வைகாசி பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் வடுகபட்டி கிராம மைதானத்தின் நடுவில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில், ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த 14 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடங்கிய குழுவினா் களம் இறக்கப்பட்டனா்.
இவா்களுக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. போட்டியில் வென்ற மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா, குத்துவிளக்கு, தென்னங்கன்று, பொங்கல் பானை, ரூ. 15ஆயிரம் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை வடுகபட்டி, அம்மன்பட்டி, மூலக்கரைப்பட்டி, கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை வடுகபட்டி கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.