தங்கம் விலை இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சமீப நாள்களாக சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் தங்கத்தின் விலை சனிக்கிழமை(மே 24) மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை மே 21-இல் பவுனுக்கு ரூ. 1,760 உயா்ந்து ரூ.71,440-க்கும், மே 22-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,800-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனையானது.
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.