இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அக...
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது
சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய் குமார் சனிக்கிழமை (மே 24) தொடங்கி வைத்தார்.
நிலைக்குழு கூட்டம் அரசுத் துறை பணியாளர்களை தேர்வு செய்யும் செயல்முறைகளில் நேர்மையான, வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்வது, சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மற்றும் தேர்வுத் தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்ற முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு முக்கிய அமைப்பாக செயல்படுகிறது.
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிலைக்குழு கூட்டத்தில் அரசுப் பணிக்கான தேர்வுகளில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் நிலைக்குழுவின் தேர்வாணையத்தின் தலைவர் அலோக் வர்மா, தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர், ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், நாகலாந்து, ராஜஸ்தான், மற்றும் உத்தரப் பிரதேசம் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.