பினராயி விஜயன் பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து
கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(மே 24) தனது 80 ஆவது பிறந்தநாளினைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் மலையாளத்தில் பதிவிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில்,
ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി, പ്രിയ സഖാവ് @pinarayivijayan-ന് ഹൃദയം നിറഞ്ഞ പിറന്നാളാശംസകൾ നേരുന്നു. പുരോഗമനപരമായ ഭരണത്തോടുള്ള താങ്കളുടെ സമർപ്പണവും ഫെഡറലിസത്തോടും മതേതരത്വത്തിനോടുമുള്ള നമ്മുടെ പ്രതിബദ്ധതയും തമിഴ്നാടും കേരളവും തമ്മിലുള്ള ബന്ധത്തെ ശക്തമാക്കുന്നു.
— M.K.Stalin (@mkstalin) May 24, 2025
ഇരു… pic.twitter.com/JLqO4PPoAm
கேரள முதல்வரும் எனது அன்புத் தோழருமான பினராயி விஜயனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை மீதான நமது உறுதிப்பாடும் தமிழ்நாடு - கேரளம் உறவினை வலுப்படுத்துகின்றன.
நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்! தாங்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன் என கூறியுள்ளார்.