செய்திகள் :

ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி அறிமுகம்! வியக்கவைக்கும் விலையில்..!

post image

கம்யூட்டர் மற்றும் பந்தய பைக்குகளுக்கு பெயர்பெற்ற ஹோண்டா நிறுவனம் ஹார்னெட் மாடலில் 1000 சிசி கொண்ட புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.

கவாஸாகி Z900 மற்றும் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாகவே நேக்ட் மாடல் (naked model) வகையில் இந்த பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி பைக்கில் 999cc, இன்லைன்-ஃபோர் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 11,000rpm-ல் 155bhp-யையும் 9,000rpm-ல் 107Nm திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் 6 விதமான வேக கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் மழைக்காலம், ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வடிவங்கள் உள்ளன. ரைடர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.12.35 லட்சத்தில் இருந்து துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க