உடல் எடை குறைப்பில் ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக, இருவரும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, ரவி மோகன் கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில், கராத்தே பாபு படத்திற்காக தன் உடல் எடையை 12 கிலோ வரை குறைப்பதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
படத்தின் முக்கியமான காட்சிகளுக்கு மிக இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ரவி மோகன் எடை குறைப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ‘மோசம்..’ ஷங்கர் மீது கேம் சேஞ்சர் எடிட்டர் குற்றச்சாட்டு!