செய்திகள் :

இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

post image

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

முழு உடல்தகுதி இல்லை

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் மருத்துவக்குழு கூறியதன் அடிப்படையில் பார்க்கையில், இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடவே வாய்ப்பிருக்கிறது. மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடினாலும், அணிக்காக போட்டியை வென்று கொடுப்பவர் அவர்.

இதையும் படிக்க: சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல: அஜித் அகர்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது, ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது, அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முழுமையாக விளையாட முடியாவிட்டாலும், அவர் அணியில் இடம்பெற்றுள்ளதே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 5 போட்டிகளில் அவர் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய சோயப் பஷீர்; இங்கிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க

இது வெறும் ஆரம்பம் மட்டுமே... இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து தமிழக வீரர் சாய் சுதர்சன் பேசியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வ... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!

8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்துள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல: அஜித் அகர்கர்

சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது எளிதான விஷயமாக இருக்காது என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்ட... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு இளம் வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அணியில் இடம்பெறவில்லை.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு! இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்..!

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்... மேலும் பார்க்க