செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து: காரணம் என்ன?

post image

சென்னை விமான நிலையத்தில் புறப்பட வேண்டிய 2 விமானங்கள், வரவேண்டிய 3 விமானங்கள் என 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 6 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானங்கள், புணேயில் இருந்து அதிகாலை 4.25 மணி, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 1.45 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை

பயணிகள் விமானங்கள் முன் அறிவிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் ஏதுவும் செய்யப்படாத நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வணிக மற்றும் தனிப்பட்ட பயணங்களைத் திட்டமிட்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

மேலும், நிர்வாக காரணங்களால் 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாதிப்புக்குள்ளான பயணிகள் பணத் தொகையை திரும்பப் பெறுதல், மறு முன்பதிவு மற்றும் விளக்கங்கள் கேட்டு விமான நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசைகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க, விமான நிலையம் வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானத்தின் நேரத்தை உறுதி செய்துகொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை: கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் என்னென்ன..?

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீ... மேலும் பார்க்க

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது

சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்காக ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறி... மேலும் பார்க்க

பினராயி விஜயன் பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(மே 24) தனது 80 ஆவது பிறந்தநாளினைக் க... மேலும் பார்க்க

நகை பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் கிராமம், வாழகுட்டை என்ற பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தோடு, மூக்குத்திகளை பறித்து சென்ற நபரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சங்ககி... மேலும் பார்க்க

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கிய... மேலும் பார்க்க