Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
தொடா் குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மேலக்குடியிருப்பு, மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஜோதிமணி மகன் விஜய் (24). இவா் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 3.5.2025 அன்று வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜயை ஜெயங்கொண்டம் காவல் துறையினா் கைது செய்து, கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், இவா் வெளியே வந்தால் மீண்டும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரை செய்ததையடுத்து, ஆட்சியா் பொ. ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து விஜயை குண்டா் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.