கன்னட மொழிப் பிரச்னை.. அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன்: தொழிலதிபர் பதிவு
அரியலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
முகாமில் முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே 18 வயது முதல் 45 வரையிலான பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், வேளாண்மை மற்றும் உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 80982 56681 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.