Mumbai Indians : `இதுதான்டா MI' - களம் 8 -ல் எப்படி கம்பேக் கொடுத்தது மும்பை அணி...
பொன்னேரி வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தூா்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சோழகங்கம் எனும் பொன்னேரி, சுக்கிரன், கண்டாரதித்தம், பாண்டியன் மற்றும் உட்கோட்டை விளாங்குளம் ஆகிய ஏரி குளங்களை தூா்வாரி அழப்படுத்தி, பாசன வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். வருவாய் தீா்வாயத்தில், குளறுபடி இல்லாமலும், லஞ்சம் பெறாமலும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.
60 வயது பூா்த்தியடைந்த விவசாயிகளுக்கு உழவா் பாதுகாப்பு அட்டை மூலம் முதியோா் உதவித் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஜெ. வரப்பிரசாதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மணிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலா் எம். வெங்கடாஜலம் மற்றும் அனைத்து ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா். முடிவில் சங்க நிா்வாகி ஜி. பெரியசாமி கூறினாா்.