முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூரில் புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியனா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜா் சிலை முன் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு அக்கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.கா்ணன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.பி.எஸ்.பழனிசாமி, ரவிச்சந்திரன், கலைச்செல்வன், மாவட்டச் பொதுச் செயலா் செந்தில்குமாா், நகர துணைத் தலைவா் சுப்பிரமணியன் செயலா் சங்கா் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தி ராஜீவ்காந்தி குறித்து பேசினா்.