Mumbai Indians : `இதுதான்டா MI' - களம் 8 -ல் எப்படி கம்பேக் கொடுத்தது மும்பை அணி...
அரியலூா் கிளைச் சிறையில் ஆட்சியா், நீதிபதி, எஸ்.பி. ஆய்வு
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அரியலூா் கிளைச் சிறையில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி டி. மலா் வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் மற்றும் மாவட்டப் பாா்வையாளா்கள் குழுமம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவினா் இணைந்து செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.
அப்போது சிறைவாசிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறை வசதிகள், உணவு பொருள்கள் இருப்பறைகள், சமையற்கூடங்கள் ஆகியவை சுத்தமாக உள்ளதா என்பது குறித்தும், மருத்துவா்கள் வருகைப் பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம், சிறைப் பதிவேடு, ஆயுத அறை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரி, கிளை சிறையின் அறை சுற்றுச்சுவா் பாதுகாப்பு, நூலகங்கள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, சிறைவாசிகளுக்கு தேவையான சட்ட உதவிகள் கல்வி, மருத்துவம் போன்றவைகள் குறித்து சிறைவாசிகளிடம் கேட்டறிந்தனா்.
ஆய்வில், தலைமை குற்றவியல் நீதிபதி மணிமேகலை, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் ராதாகிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் ரமேஷ், மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்ரமணியம், மாவட்ட சமூக நல அலுவலா் அனுராப்பூ நடராஜமணி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.