செய்திகள் :

தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்

post image

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22).

கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்திற்காக தனது தாயார் வீட்டிற்குச் சுஜாதா சென்று இருந்தார்.

குழந்தை பிறந்தவுடன் தனது மனைவியிடம் தனது ஊருக்கு வரும்படி சேகர் கேட்டுக்கொண்டார். ஆனால் சில நாட்கள் இருந்துவிட்டு வரட்டும் என்று கூறி சுஜாதாவின் பெற்றோர் கூறிவிட்டனர்.

Baby
Baby

சேகர் தனது மனைவி சுஜாதாவை அழைப்பதற்காக மனைவியின் ஊருக்குச் சென்றார். இரவில் அவர் குடிபோதையில் வீட்டிற்குச் சென்றவுடன், தனது மனைவி அருகில் அப்படியே போய் படுத்துவிட்டார்.

ஆனால் மனைவி அருகில் குழந்தை போர்வை போர்த்திய நிலையில் உறங்கிக்கொண்டிருந்தது. இதனை சேகர் கவனிக்காமல் குழந்தை மீது படுத்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்துதான் சுஜாதா இதனைக் கவனித்தார். குழந்தையைப் பார்த்தபோது அதன் முகத்தில் ரத்தம் வந்த நிலையில், மூச்சுத்திணறி இறந்து இருந்ததைப் பார்த்து பதறி போயுள்ளார்.

இது குறித்து சுஜாதாவின் தாயார் ராஜாமணி போலீஸில் புகார் செய்துள்ளார். இது குறித்து ராஜாமணி கூறுகையில், ''சேகர் இரவில் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினார். தனது மனைவியைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கூறி கத்தினார்.

ஆனால் அவரை நாங்கள் வீட்டிற்குள் விடவில்லை. அதிகாலை 5 மணிக்கு எனது மகன் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கதவைத் திறந்தபோது சேகர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

வீட்டிற்குள் சென்றவர் அப்படியே சுஜாதா அருகில் படுத்துவிட்டார். குழந்தை அருகில் படுத்து இருந்ததைக் கவனிக்கவில்லை.

Baby
Baby

சுஜாதா எழுந்தபோதுதான் இதனைக் கவனித்தார். லைட்டை போட்டு பார்த்தபோது குழந்தை மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இருந்தது.

உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்'' என்றார்.

தந்தையின் கவனக்குறைவால் குழந்தை பரிதாபமாக இறந்திருந்து போனது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நாகராஜ் மனைவி ஆன... மேலும் பார்க்க

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்; பயணிகள் அலறல்.. பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

டெல்லியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது 6E2142 என்ற இண்டிகோ விமானம். அந்த விமானத்திலிருந்து பயணிகளில் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அந்த வீ... மேலும் பார்க்க

சிவகங்கை பயங்கரம் : கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு; சோகத்தில் மக்கள்

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளத... மேலும் பார்க்க

Sunset: சூரியன் மறைவதை போட்டோ எடுக்க முயன்ற மாணவி; 7-வது மாடியில் தவறி கீழே விழுந்து மரணம்

மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வசித்தவர் மாணவி ஜான்வி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வந்தார். ஜான்வி மாலை நேரத்தில் தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோ... மேலும் பார்க்க

திருப்பூர்: சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது தாக்கிய விஷவாயு; இருவர் பலி... மூவர் கவலைக்கிடம்!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சாயக்கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை மாலை ஐந்து பேர்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: உரிமம் பெறாத பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சர்புதீன் இவர் விழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு விற்பனை செய்து வந்தார். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவரது மகன் அப்பாஸ் வெளிநாடு... மேலும் பார்க்க