ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!
மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்களிடம் பெற்ற 21 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.