செய்திகள் :

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

post image

திருநெல்வேலி: திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான பிரச்னைகளுக்குப் பின்னால் பாஜக இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வெள்ளித்தேர் திருப்பணிக்கு ஒரு கிலோ வெள்ளியை வழங்கிய பின் செய்தியாளர்களுடன் நயினாா் நாகேந்திரன் பேசினார்.

அப்போது, நெல்லையப்பர் திருக்கோவிலில் புதிய வெள்ளித்தேர் திருப்பணிக்காக பக்தர்களால் 175 கிலோவுக்கு மேலாக வெள்ளி உபயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நானும் ஒரு கிலோ வெள்ளி வழங்கியுள்ளேன். நெல்லையப்பர் கோயிலில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அமைச்சராக இருந்தபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் திருப்பணிக்கு அனுமதி பெற்று மீண்டும் 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

புதிய யானை

நெல்லையப்பர் கோயிவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில முதல்வருடன் பேசப்பட்டுள்ளதாகவும், மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் பாமக தொடர வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்றும், பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் விருப்பம் தெரிவித்தார். திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

கூட்டணி பற்றிய அறிவிப்பு எப்போது? - பிரேமலதா பதில்!

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்

பாஜக - அதிமுக கூட்டணி உடைந்துவிடும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் எண்ணம். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்வர் மு.க. ஸ்டாலின் களத்தில் இருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலானவற்றை முதல்வர் நிறைவேற்றாத நிலையில், சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குற்றம் சாட்டினார்.

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம்

மேலும், மீதமுள்ள 10 மாத கால ஆட்சியில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்றால், வரவிருக்கும் பாஜக ஆட்சியில் அது நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார். புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்போது பல்வேறு எதிர்ப்புகள் இருப்பது இயல்புதான் என்றும், ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது, தற்போது தங்க நகைக்கான பல்வேறு விதிமுறைகளும் சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம்

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் முஸ்லீம்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது அல்ல என்றும், அண்டை நாடுகளிலிருந்து மேற்கு வங்கத்தின் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார். நாட்டில் உள்ள எந்த முஸ்லீம்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று அவர் கூறினார்.

பிரபலங்கள் விவாகரத்து: பிரேமலதா சொல்லும் அறிவுரை என்ன?

சமீபத்திய சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு சம்மட்டி அடி: ஆர்.எஸ். பாரதி

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் நிற... மேலும் பார்க்க

மரங்களைக் காப்பாற்றுங்கள்!

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோர மரங்களின் பாதிப் பகுதி கிளைகள் திடீரென சில நாள்களாக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.சென்னை மாநகரில் சாலைகளில் இருந்த பெரு மரங்கள் ஏற்கெனவே சாலைகளை அகலப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிதம்பரம் ரயி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை ... மேலும் பார்க்க

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே ந... மேலும் பார்க்க