செய்திகள் :

டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!

post image

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. அப்போது சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

மேலும், இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்புமீறி செயல்படுகிறது.

முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது விசாரிக்கலாம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் நீங்கள் எப்படி விசாரிக்கலாம்?

டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனமாகும். தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் விசாரிப்பதா?" என்று பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

பிரபலங்கள் விவாகரத்து: பிரேமலதா சொல்லும் அறிவுரை என்ன?

சமீபத்திய சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு சம்மட்டி அடி: ஆர்.எஸ். பாரதி

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் நிற... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

மரங்களைக் காப்பாற்றுங்கள்!

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோர மரங்களின் பாதிப் பகுதி கிளைகள் திடீரென சில நாள்களாக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.சென்னை மாநகரில் சாலைகளில் இருந்த பெரு மரங்கள் ஏற்கெனவே சாலைகளை அகலப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிதம்பரம் ரயி... மேலும் பார்க்க

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே ந... மேலும் பார்க்க