செய்திகள் :

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், விபத்துகள் தொடர்ந்து நேர்ந்து வருகிறது. முக்கியமாக வாகனங்கள் திசை மாறி செல்லும் இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இல்லாமல் ஆபத்தான சூழல் நிலவிக் காணப்படுகிறது.

காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் இங்கு நின்றுதான் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, 'நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் மிகவும் வேகமாக வருகிறது. சென்னையை நோக்கி வாகனங்கள் செல்லும் போது அதேசமயம் எதிர்த் திசையில் திருப்பத்தூருக்குச் செல்வதற்கு வாகனங்கள் முந்துகின்றன. இடது பக்கம் நாட்டறம்பள்ளி செல்வதற்கான மேம்பாலம் உள்ளதால் ஒரே சமயம் வாகனங்கள் அனைத்தும் உள்ளே நுழைகின்றன.

சிறிது தொலைவிற்கு முன்னரே வேகத்தைக் குறைத்து வர வேண்டும். ஆனால் ஒரு சிலர் எதையும் பொருட்படுத்தாமல் வருவதால் இங்கு அதிகம் விபத்துகள் நடந்து வருகிறது. அதாவது சொல்லப் போனால் வாரத்திற்கு ஒரு விபத்து குறையாமல் நடக்கிறது. இது போன்ற சூழல் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்காமல் பல முறை திக்குமுக்காடுகின்றோம்.

அண்மையில்கூட பைக் மற்றும் வேன் மோதி பெரும் விபத்து நேர்ந்து, அப்பகுதியைக் கதிகலங்க வைத்தது. இது போன்று இங்கு பல அசம்பாவிதங்கள் நடந்தேறுகிறது. விபத்துகளைத் தடுத்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, “இத்தகைய நிலைமை பல இடங்களில் உள்ளது. வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன், கட்டுப்பாட்டுடன் வாகனம் ஓட்ட வேண்டும். நாங்களும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்விடத்திலும் விரைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றனர்.

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால... மேலும் பார்க்க

கழுகார்: ஜெயக்குமார் மரண வழக்கு; தற்கொலை என முடிக்க ஆலோசனை? டு அடுத்தது யார்? கிலியில் அமைச்சர்கள்!

தற்கொலை என முடிக்க ஆலோசனை?""நெல்லை காங்கிரஸ் பிரமுகர் மரண வழக்கு...நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் மரணமடைந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு : `மாநில அடிப்படையில்தான் எடுக்க வேண்டும்’ - கி.வெங்கட்ராமன் I பகுதி 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவதுச... மேலும் பார்க்க

`பாஜக-வோடு கூட்டணி இல்லை என பேசிய ’சூனாபானா’ பழனிசாமி, எதற்காக...' - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம்? எனச் சூனா பான... மேலும் பார்க்க