ஒடிசாவில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது!
`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!
பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால் அறிமுகப்படுத்தப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது டிலைட் பால் பெரிய அளவு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. டிலைட் பால் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. தற்போது ஒரு நாளுக்கு 35 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிர்வாகத்தால் கையாளப்பட்டுகிறது. குற்றச்சாட்டுகள் ஏதாவது இருந்தால், கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக சரி செய்யப்படும்.

40 லட்சம் லிட்டர் என்ற இலக்கை ஆவினுக்கு நிர்ணயித்திருக்கிறோம். விரைவில் அந்த இலக்கை அடைவோம்.
தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யும் திறன் ஆவினுக்கு இருக்கிறது. விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டு முழுவதும் சீரான விலையை ஆவின் கொடுத்து வருகிறது. எல்லா சூழல்களிலும் ஆவினால் சப்ளை செய்ய முடியும். பேரிடர் காலங்களில் ஆவின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சென்னை, தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்டோம்.

நிதி ஆயோக் கூட்டம் குறித்து முதலமைச்சர் தெளிவான கருத்துகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலன் எந்த சூழலிலும் சமரசம் செய்யப்படாது. கடந்த ஆட்சி காலத்தில் இருந்த நிலை இருக்காது என்பதை முதலமைச்சர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து டெல்லி சென்று இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதை சொல்வதற்கு எடப்பாடி வெட்கப்பட வேண்டும். நிதி ஆயோக்கில் சென்று குடும்ப கதையை பேசிக் கொண்டிருந்தார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக குடும்ப கதையைதான் பேசி கொண்டு இருந்தனர்." என்றார்.
