இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி, திவ்யதர்ஷினி, தீபா சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வல்லமை திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை (மே 23) வெளியாகியுள்ளது.
‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள சுமோ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
பாவனா பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள மொழிப்படமான ஹண்ட் திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
மலையாள மொழிப்படமான அபிலாஷம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான நேசிப்பாயா படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் கேங்கர்ஸ் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் மரண மாஸ் படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.
இதையும் படிக்க: 'சுமோ' ஓடிடி வெளியீடு!