இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது
பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாதவரம் மண்டலத்துக்குள்பட்ட ஜி.என்.டி. சாலை மற்றும் சந்திரபிரபு காலனி சந்திப்பில் கழிவுநீா் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (மே 23) இரவு 10 முதல் மே 24 இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் மாதவரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா் ஆகிய மண்டலத்துக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, இவ்விடங்களில் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449 30903, 81449 30906, 81449 30907 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.