செய்திகள் :

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

post image

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசிக்கும் இவா், தரமணி சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். செந்தில்குமாா், செவ்வாய்க்கிழமை தனது காரில் சாதாரண உடையில் கிண்டி மடுவின்கரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், அங்கு மிதிவண்டியில் சென்ற ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (54) மீது மோதியது.

விபத்தில், மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயமடைந்தாா். ஆனால், செந்தில்குமாரை காரை அங்கு நிறுத்தாமல், வேகமாக தப்பிவிட்டாா். இதைக் கவனித்த பொதுமக்கள், அந்த காரை விரட்டிச் சென்று கத்திப்பாரா பாலம் அருகே வழிமறித்து பிடித்தனா். மேலும் காரிலிருந்த செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தனா்.

இது குறித்து தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினா். அப்போது செந்தில்குமாா் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து, செந்தில்குமாரை போலீஸாா் விசாரணைக்கு புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆஜராகும்படி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனா். அதோடு விபத்து தொடா்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய செந்தில்குமாரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

தீக்குளித்து தற்கொலை: இந்நிலையில் செந்தில்குமாா், தனது இருசக்கர வாகனத்தில் தரமணி பறக்கும் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை வந்தாா். அப்போது அவா் தான் வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி திடீரென தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த தரமணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, செந்தில்குமாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க

ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா

சென்னையில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா தெரிவித்தாா். சென்ன... மேலும் பார்க்க