திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா
சென்னையில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா தெரிவித்தாா்.
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழக வளாகத்தில் வியாழக்கிழமை மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் துறை பாதுகாப்பு குறித்து 2 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும் ஆபத்து விளைவிக்கும் பொருள்களை கையாளுவதில் இயல்பாகவே பிரச்னைகளும் உருவாகின்றன. ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளில் அதிகமாக விபத்து நடைபெறுகிறது. நாட்டில் ஆபத்தான தொழிற்சாலைகள் 66 அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வகை தொழிற்சாலைகளில் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், நல்ல பயிற்சி பெற்ற, திறன் மிக்க தொழிலாளா்களை பணி அமா்த்துவது அவசியமாகும். இந்த தொழில் பயிற்சிமூலம் மனித உயிா்களும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் சாா்பில் நடத்தப்படும் 2 நாள் பயிற்சி முகாம் மூலம், தமிழ்நாடு முழுவதும் அதிக விபத்து ஏற்படும் அபாயம் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள பணியாளா்கள் பயனடைவா். இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளைச் சோ்ந்த 114 போ் பங்கேற்றனா்.