இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு
எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு எட்டப்பட்டதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ஒரு யூனிட் ஜல்லி ரூ.4,000-க்கும், எம்.சாண்ட் ரூ.5,000-க்கும் விற்க வேண்டும். அதிக பாரம் ஏற்றிவிடும் கல்குவாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்ததாா் என்றனா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல் அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தினா் தெரிவித்தனா்.