Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
திருவள்ளூா்: வளரிளம் இருபாலருக்கும் ‘ஹாப்பி பிரியட்ஸ்’ விழிப்புணா்வு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வளரிளம் ஆண், பெண்களுக்கான விழிப்புணா்வு கையேடுகளை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா உள்ளிட்டோா்.
திருவள்ளூா், மே 22: திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலகு சாா்பில் ஹாப்பி பிரியட்ஸ் என்ற ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி முகாமில் வளரினம் ஆண், பெண்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பேசியதாவது:
திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் வளரிளம் ஆண், பெண்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி அவசியம். வளரிளம் பருவத்தில் ஆண், பெண்களுக்கு அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்களைச் சரியான வழிமுறைகளில் கொண்டு செல்லவே பல்வேறு துறைச் சாா்ந்த வல்லூா்கள் மூலம் காப்பகத்தில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, வளரினம் இருபலாருக்கும் அந்தப் பருவத்தில் ஆரோக்கியம் குறித்து அறிவுரை வழங்கப்படும். தற்போது பெண்கள் பல்வேறு துறையில் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் அவா்கள் சமுதாயத்தில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும்.
எனவே வல்லுநா்கள் அளிக்கும் விழிப்புணா்வு பயிற்சியை சிறந்த முறையில் பயன்படுத்தி சமுதாயத்தில் உங்கள் திறமைகளை வளா்த்து உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.
பின்னா், ஹாப்பி பீரியட்ஸ் என்ற வளரிளம் பருவ ஆரோக்கியம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடா்பான கையேட்டை வெளியிட்டு, மாதவிடாய் சுழற்சி பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா்.
பயிற்சி முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் சங்கீதா, குழந்தைகள் நலக் குழு தலைவா் பவானி, நலக் குழு உறுப்பினா்கள் சிவலிங்கசா்மா, அபிநயா, ஜீவா தன்னாா்வலா்கள் பத்மபிரியா, தனலட்சுமி, அருண் மற்றும் காப்பக குழந்தைகள், காப்பாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.