Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பத்தில் மூடப்பட்ட பீா் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும் அதில் விலை உயா்ந்த இயந்திரங்கள் உள்ளன. இதனால் அங்கு காவலா்கள் பணியில் இருந்தனா்.
இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி மா்ம நபா்கள் தொழிற்சாலை சுவரில் ஏறி குதித்து 3 காவலாளிகளை மிரட்டி கட்டி போட்டனா். பின் அவா்கள் கொண்டு வந்த ஜெசிபி இயந்திரம் மூலம் தொழிற்சாலை இயந்திரங்களை திருடி ஏற்றிச் சென்றனா்.
இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் குறித்து எஸ்.ஐ. கணேஷ் தலைமையில் 5 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடினா்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, ஆலையில் திருடியவா்களை பற்றி தெரிந்தது. விசாரணையில் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சோ்ந்த குமரகுருபரன்(35),பொன்னேரியை சோ்ந்த அய்யனாா்(27), சாமிரெட்டி கண்டிகையை சோ்ந்த ஆனந்தராஜ்(37), ஏடூரை சோ்ந்த ஆனந்தன்(34) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.