செய்திகள் :

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

post image

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற பகுதிகளில் கரோனாவின் புதிய மாறுபாடான ஜெஎன்1 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில் கர்நாடகத்தில் மே மாதம் தொடங்கியதிலிருந்து கரோனா தொற்று மெல்ல அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதாரத்துறை தரவுகளின்படி, ஜனவரியில் மூன்று பேருக்கும், பிப்ரவரியில் ஒருவருக்கும் கரோனா பதிவாகியுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 3 பேருக்குத் தொற்று பதிவாகியது. இதையடுத்து மே மாதத்தில் 33 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

புதிய பாதிப்புகளில், பெங்களூரு கிராமப்புற மாவட்டமான ஹோல்கோட்டைச் சேர்ந்த 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து நிலையில், தொடர் சிகிச்சையளிப்பதற்காக பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடகத்தில் 16 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் இந்தியாவில் 257 பேருக்கு கரோனா தொற்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.

தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!

புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலம் முழுவதும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் முதல் எஃப்எம் வானொலி நிலையம் அறிமுகம்

உத்தரகண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ராணுவத்தின் மத்திய கட்டளையின் பொது அதிகாரி அனிந்தியா சென்குப்தா தொடங... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

ஹரியாணா மாநிலத்தில் புதியதாக 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஹரியாணாவின் குருகிராமம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்றுபட... மேலும் பார்க்க

கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ... மேலும் பார்க்க

உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க