உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அப்போது மரங்கள் விழுந்தும், சுவர்கள் இடிந்து விழுந்தும் மற்றும் மின்னல் தாக்கியும் 49 பேர் பலியானதாக பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதன்படி காஸ்கஞ்ச் மற்றும் ஃபதேபூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், மீரட், அவுரையா மாவட்டங்களில் தலா 4 பேரும், புலந்த்ஷஹர், கௌதம் புத்த நகர், கன்னோஜ், கான்பூர் நகர் மற்றும் எட்டாவில் தலா 3 பேரும் பலியாகினர்.
இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த 23 குளிர்சாதனப் பேருந்துகள்!
மேலும் காசியாபாத், ஃபிரோசாபாத், எட்டாவா மற்றும் கான்பூர் தேஹாத் ஆகிய இடங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் தலா 2 பேர் பலியாகினர்.
இதனிடையே பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு நிவாரண ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.