விதிகளை மீறும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!
இன்று என்னுள் ஏதோவொன்று... நெகிழ்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
’டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.
சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இலங்கையில் நிலவிய பொருளாதர நெருக்கடியால், அங்கிருந்து தமிழ்நாட்டில் குடியேறும் குடும்பத்தினரை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி பல்வேறு முக்கிய பிரபலங்களின் பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமௌலி ஆகியோரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து, நடிகர் சூர்யாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் அபிஷன் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை, ஆனால் இன்று என்னுள் ஏதோவொன்று குணமாகியது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
முன்னதாக, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மற்றும் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ரெட்ரோ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின.
மேலும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ சர்வதேச அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!