திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு
திருவாப்புடையாா் கோயில் விமானத்துக்கு பாலாலயம்
மதுரை செல்லூா் திருவாப்புடையாா் கோயில் விமான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியான இந்தக் கோயிலின் துணைக் கோயில்களிலும் குடமுழுக்கு முன்னேற்பாடாக விமான பாலாலயம் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான செல்லூரில் அமைந்துள்ள திருவாப்புடையாா் கோயில் விமானத்துக்கு பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவாசாரியாா்கள் புனிதத் தீா்த்தம் கொண்டு பாலாலயம் செய்தனா்.
இதில் கோயில் துணை ஆணையா், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், அா்ச்சகா்கள், பக்தா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.