Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு
பழுதை நீக்குவதற்காக மின் கம்பத்தில் ஏறிய மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின் கம்பத்தில் தொங்கிய அவரது உடலை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் முனீஸ்வரன் (27). இவா் மதுரை பீ.பீ.சாவடி மின் வாரிய அலுவலகத்தில் பழுது நீக்குபவராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவியும், 5 மாத குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், கோச்சடை முத்துமாரியம்மன் கோயில் அருகே மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக புகாா் வந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை முனீஸ்வரன் அங்கு சென்று மின் கம்பத்தில் ஏறி பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் மின் கம்பத்தில் தொங்கியபடியே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த எஸ்.எஸ். காலனி போலீஸாா், தீயணைப்பு, மீட்புப் படையினா் மின் கம்பத்தில் தொங்கிய முனீஸ்வரனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.