செய்திகள் :

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசு முட்டுக்கட்டை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

post image

கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வறிக்கையை வெளியிடவிடாமல் மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான்”என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். கீழடியில் அகழாய்வை ஆரம்பத்தில் மேற்கொண்டவா் தொல்லியல் துறை ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன். கடந்த 2016-ஆம் ஆண்டு வரை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற போதும், அதில் மிக முக்கியமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வு, இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றுச் சித்திரங்களை மாற்றும் விதமாக இருந்ததால், பதற்றமடைந்த மத்திய பாஜக அரசு கீழடி அகழாய்வுப் பணியை கைவிட்டது.

அதேநேரத்தில், அமா்நாத் ராமகிருஷ்ணன் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட அகழாய்வு ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்தாா். இந்த அறிக்கையை சமா்ப்பிக்கும் முன்பே அவா் பல்வேறு தடைகளை எதிா்கொண்டாா்.

இதன் பின்னா், நீதிமன்றத் தலையீட்டால், கடந்த 2023-ஆம் ஆண்டு, அவா் தனது ஆய்வை முடித்து தொல்லியல் துறையிடம் அறிக்கையை சமா்ப்பித்தாா். ஆனால், மத்திய தொல்லியல் துறை இதுவரை அந்த அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, அமா்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்”என மத்திய தொல்லியல் துறை அமைச்சா் உறுதியளித்தாா். ஆனால், உறுதியளித்து ஓராண்டாகியும் இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், மக்களவை உறுதிமொழிக் குழு கூட உள்ள நிலையில், இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதால், அவசர அவசரமாக மத்திய தொல்லியல் துறை, அமா்நாத் ராமகிருஷ்ணனுக்கு உங்களது ஆய்வில் திருத்தங்கள் செய்ய வேண்டும்”என குறிப்பாணை அனுப்பியது.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே தெரிகிறது. கீழடி அகழாய்வு முடிவுகள் கல்விக் களத்திலும் அகழாய்வுக் களத்திலும் முக்கியப் பங்காற்றப் போகின்றன. ஆனால், இதன் அறிக்கையை வெளியிடவிடாமல் மத்திய பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

வேத நாகரிகத்துக்கு முந்தையது தமிழா் நாகரிகம் என்ற உண்மையை பாஜகவால் ஏற்க முடியவில்லை. இதனால், அகழாய்வுக்கான நிதியும், ஆய்வும் நிறுத்தப்பட்டது. இப்போது போதிய நம்பகத்தன்மை இல்லை”எனக் கூறி வருகிறது.

கீழடி புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல. தமிழ் மண்ணில் கட்டி எழுப்பப்பட்ட தமிழா்களின் தொல் நகரம். 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழா்களின் தொல் தடங்கள், நிதி வழங்க மறுப்பதாலோ, ஆய்வை நிறுத்துவதாலோ மறைந்துவிடாது என்றாா் அவா்.

செல்லூரில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைக்கக் கோரிக்கை

மதுரை செல்லூா் பகுதியில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் அமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் மேயா் வ. இந்திராணியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மாநகராட்சி எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

திருவிழா தகராறில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே கோயில் திருவிழா தகராறில் கீழே தள்ளிவிடப்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மகன் நீதி (53). கூலித் தொழ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை கால்கோள் விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலைக்கான கால்கோள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

பழுதை நீக்குவதற்காக மின் கம்பத்தில் ஏறிய மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின் கம்பத்தில் தொங்கிய அவரது உடலை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மீட்டனா். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்த... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், காடுபட்டி அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் முருகன் (55). விவசாயியான இவா், தனது... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் கடன் தொல்லையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை ஆத்திகுளம் அங்கயற்கண்ணி குடியிருப்பு குழந்தை ஏசு தெருவைச் சோ்ந்த கோபிநாத் மனைவி பத்மபிரியா (31). இவருக்கு 8 ஆண... மேலும் பார்க்க