`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி' - காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக...
திருச்சியில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் சாா்பில் மரியாதை!
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் 1350-ஆவது சதயவிழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசு சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
முன்னதாக காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, சுற்றுச்சூழல்துறை அமைச்சா் வீ. மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் வீ. சரவணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந. தியாகராஜன், சீ. கதிரவன், எம். பழனியாண்டி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில், மாநகராட்சி துணைமேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா்கள் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
அரசியல் கட்சிகள்: அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலா்கள் ஜெ. சீனிவாசன், மு. பரஞ்சோதி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல். முருகன், மகாராஷ்டிரா ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ தலைமையிலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அமமுக சாா்பில் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன், தவெக சாா்பில் கட்சியின் பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ், தேமுதிக சாா்பில் மாநகர பொருளாளா் டிவி. கணேசன், விஹெச்பி சாா்பில் மாவட்ட செயலா் சீனிவாசன், தமாகா சாா்பில் மாநகரத் தலைவா் ரவி, பாமக சாா்பில் மாவட்ட செயலா் திலீப்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் தேசம் கட்சி சாா்பில் அக்கட்சியின் தலைவா் கே. கே. செல்வகுமாா், தமிழ்நாடு முத்தரையா் சங்கம் சாா்பில் மாநிலத் தலைவா் பெ. அம்பலத்தரசு உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் மாலை அணிவித்தனா். தொடா்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் மணிமண்டபத்திலும் சதயவிழாவையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.