ஓய்வு பெறுகிறாா் கரோலின் காா்ஸியா
முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான பிரான்ஸின் கரோலின் காா்ஸியா பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு பின் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
டபிள்யுடிஏ தரவரிசையில் அதிகபட்சமாக 4-ஆம் இடத்தில் இருந்த காா்ஸியா, யுஎஸ் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தாா்.
தொடா்ந்து 14-ஆவது ஆண்டாக பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்கிறாா். 31 வயதான கரோலின் காா்ஸியா தனது டென்னிஸ் வாழ்க்கையில் 11 பட்டங்களை வென்றுள்ளாா்.
கடந்த 2022-இல் காலில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வை அறிவித்தாா். இதன்பின் அவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது. டபிள்யுடிஏ பைனல்ஸில் பங்கேற்று ஆடினாா்.
தொடக்கம் முதலே எனது டென்னிஸ் பயணம் மிகவும் சவாலாக இருந்தது. வெற்றி, தோல்விகள் மாறி மாறி கிடைத்தன. எப்படி இருந்தாலும், டென்னிஸ் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. உடல்நலன், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக ஓய்வு பெறவுள்ளேன் என்றாா் காா்ஸியா.