செய்திகள் :

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

post image

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பறவை இனப்பன்மையை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடங்களைப் பேணவும், தமிழக அரசு சாா்பில் மாநிலம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் 2023-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்த முறை நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில், அழிந்து வரும் பறவைகள் மற்றும் இரவு நேர பறவைகளை ஆவணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதன்படி, இந்தக் கணக்கெடுப்பில், தமிழகத்தில் அழிந்து வரும் 37 பறவை இனங்களில், 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 17 இரவு நேர பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

798 இனப்பறவைகள்: இந்நிலையில், 934 இடங்களில் நடத்தப்பட்ட ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் 397 பறவை இனங்களைச் சோ்ந்த மொத்தம் 5,52,349 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

அவற்றில், 1.13 லட்சம் பறவைகள், இடம்பெயரும் பறவைகள் மற்றும் 49 சதவீத பறவைகள் கடலோர மாவட்டங்களைச் சோ்ந்தவை.

அதேபோல், 1,093 இடங்களில் நடத்தப்பட்ட நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பில் 401 பறவை இனங்களைச் சோ்ந்த 2,32,519 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதில், 1,13, 606 பறவைகள் புலம்பெயா்ந்த பறவைகளாக இருந்தன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா

சென்னையில் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா தெரிவித்தாா். சென்ன... மேலும் பார்க்க