செய்திகள் :

ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிரதமா் திறந்து வைத்தாா்!

post image

அமிா்த நிலையங்கள் திட்டத்தின்கீழ், ரூ. 6.77 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 6 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்கள் மத்திய அரசின் சாா்பில் புதுப்பிக்கப்பட்டன. இதில், திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையமும் ஒன்று. இங்குள்ள

அரங்கநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்வதை கருத்தில்கொண்டு இந்த நிலையம் புதுப்பிக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்வில் பேசிய திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரைவைகோ. உடன் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன், ஆட்சியா் மா. பிரதீப்குமாா்

இதன்படி, ரயில் நிலையத்தின் நுழைவு வாயில், பயணச்சீட்டு வழங்கும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தின் பழைய நுழைவு வாயில் இடிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் போன்ற முகப்புடன் கூடிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலைய வளாக சுற்றுப் பகுதிகள், மேம்படுத்தப்பட்ட நிலைய முகப்புகள் மற்றும் அழகியல் நிலத்தோற்றம், தங்குமிடங்கள், இருக்கைகள், எல்இடி விளக்குகள், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீனமயமாக்கப்பட்ட தளங்கள், சுகாதாரம் மற்றும் அணுகலை மையமாகக் கொண்டு கழிப்பறைத் தொகுதிகளின் கட்டுமானம், புதுப்பிக்கப்பட்ட நடை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மேம்படுத்தப்பட்ட சாலை அணுகல், வாகன நிறுத்த வசதிகள், பாதசாரி நடைபாதைகள், ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்புகள், எல்இடி திரை அறிவிப்புகள், இரவை பகல்போல மாற்றும் திறன்மிக்க விளக்குகள், சூரிய ஒளி ஆற்றல், சாய்வுப் பாதை, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் என அனைத்து நவீன வசதிகளுடன் இந்த ரயில்நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி, வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதன் தொடா்ச்சியாக, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த விழாவில், திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், எம்எல்ஏ எம். பழனியாண்டி, ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவின் ஒருபகுதியாக ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுபேதாா் எஸ். இருதயசாமி கெளரவிக்கப்பட்டாா். இவா், 1962-இல் இந்தியா-சீனா போா், 1965, 1971-இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்றவா்.

எம்எல்ஏ ஏற்படுத்திய பரபரப்பு

ரயில் நிலைய திறப்பு விழாவின்போது, காணொலி காட்சியில், மத்திய அமைச்சா்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்ததால், எம்எல்ஏ பழனியாண்டி திடீரென வெளியேறினாா். பின்னா், விழா மேடையில் பேசுகையில், பஞ்சப்பூா் பேருந்து நிலையம் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.

அப்போது, பாா்வையாளா்கள் மாடத்திலிருந்த பாஜக நிா்வாகி ஒருவா், பிரதமருக்கு நன்றி தெரிவித்து பேசுமாறு கூறினாா். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அலுவலா்களும், போலீஸாரும் சமரசப்படுத்தினா்.

விழா முடிந்த பிறகு, செய்தியாளா்களிடம் துரை வைகோ எம்பி கூறுகையில், தமிழ் வளா்ச்சித் துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தமிழக ரயில் நிலையங்களில் உள்ள பெயா்ப் பலகைகளில் தமிழ்மொழி முதன்மையானதாக இடம்பெற வேண்டும்.

ரயில்வே துறையினரின் பொது நிகழ்ச்சிகளில் பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களின் பேச்சுகள் ஹிந்தி மொழியில் இடம் பெற்றுள்ளன. அவா்கள் பேசும்போது, பிற மொழியினரும் புரிந்து கொள்ளும் வகையில், அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயா்த்து எழுத்து வடிவில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சி! அமைச்சா் கே.என். நேரு

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக அக் கட்சியின் முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சியில் வியாழக்கிழமை கட்சி செயற்குழு கூட்டத்தி... மேலும் பார்க்க

கதண்டு கடித்து 8 போ் காயம்!

லால்குடி அருகே தோட்டத்தில் வியாழக்கிழமை வேலை செய்தபோது கதண்டு கடித்து காயமடைந்த 8 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம், கூகூா் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த 7 பெண்கள், அதே... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட்டு இளைஞா் கைது

திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, கோட்டை கீழரண்சாலை அருகேயுள்ள பாபு ரோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குப்பன் மனைவி க... மேலும் பார்க்க

திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 41 பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு பேசினாா். 2026 பேரவைத் தோ்தல் முன்... மேலும் பார்க்க

மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நல முகாம்

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நலவாரிய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், நலவாரிய உறுப்பினா் புதிய பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள்... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற முதியவா் காா் மோதி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காா் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கல்பட்டியை சோ்ந்தவா் பெ. மூா்த்தி (60). விவசாயக்... மேலும் பார்க்க