செய்திகள் :

Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசமான பாஜக நிர்வாகி

post image

அமிர்த பாரத் (Amrit Bharat Station) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, அந்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

பா.ஜ.க பிரமுகர் திருவேங்கடம்

இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி எம்.பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், பொதுமக்கள், பா.ஜ.க-வினர் உள்ளிட்ட பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, "திருச்சி மாவட்டத்தில் மிகச்சிறந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்து நிலையம் திறக்க காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர், பேருந்து நிலையத்தை திறந்த முதலமைச்சர் உள்ளிட்டோருக்கும் அதேபோல திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சருக்கும் நன்றி" என்று பேசினார்.

எம்.எல்.ஏ பழனியாண்டி

அப்போது, பழனியாண்டி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என கூறி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க பிரமுகர் திருவேங்கடம் என்பவர் திடீரென எழுந்து பழனியாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, "பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவியுங்கள்" என கூறினார்.

அதைக்கேட்ட எம்.எல்.ஏ பழனியாண்டி, "யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ உட்கார்" என்று கூற, கார சார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

``நாங்கள் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க காரணம்..'' - IMF சொன்ன விளக்கம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், பாகிஸ்தானுக்கு இரண்டாம் கட்ட கடன் தவணையான 1 பில்லியன் டாலரை விடுவித்தது சர்வதேச நாணய நிதியம் (IMF). இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெ... மேலும் பார்க்க

Switzerland: நிலச்சரிவு முன் எச்சரிக்கை, மீட்பு பணிகள்; ஹெலிகாப்டரில் பறந்த மாடு.. வைரல் வீடியோ

சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் என்ற மலைத்தொடருக்கு அருகே உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இருந்த மக்களை வெளியேற்ற ... மேலும் பார்க்க

``ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருந்து போயிடுங்க'' - மாணவர்களை மிரட்டும் ட்ரம்ப் அரசு; என்ன காரணம்?

'அமெரிக்க அரசுக்கும், அதன் கொள்கைகளுக்கும் எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன் விளைவாக, சில மாதங்களுக்கு முன்பு, "அமெரிக்காவில் படிக்கும் ம... மேலும் பார்க்க

Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இந்தப் பிரச்னை?

Doctor Vikatan:உடல்பருமன் என்பது பரம்பரையாகத் தொடருமா? சில குடும்பங்களில் எல்லோரும் பருமனாகக் காட்சியளிப்பது ஏன். இவர்கள் உடல் பருமனை குறைப்பது சாத்தியமே இல்லையா.?பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர... மேலும் பார்க்க

இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?

90's கிட்டோ , 2K கிட்டோ இன்றைய இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் பிரச்னைகளின் பட்டியலில் பரவலாக இருப்பது முதுகுவலி. இளைஞர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படியே வீட்டில் இருப்பவர்களிடம் சொன்... மேலும் பார்க்க

1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo Album

ஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோடை மலர் கண்காட்சிஏற்காடு கோட... மேலும் பார்க்க