செய்திகள் :

மே 25, 26 இரண்டு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

post image

தமிழகத்தில் மே 25, 26ல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) அதே பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.

இதன் காரணமாக மே 25, 26ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும்,

திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று (மே 22) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதியை தாண்டியுள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (மே 23... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி கடந்த 17 நாள்களி... மேலும் பார்க்க

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் திமுக பாடல்! கொந்தளித்த சிறுத்தைகள்!

புதுக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதியின் பாடல் ஒலிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணல் அம்பேத்கரின் சிலை திறப்ப... மேலும் பார்க்க

மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் 3 பேர் பலி!

ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதில் 3 பலியாகக் காரணமான ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.ராமநாதபுரத்தில் செல்லபாண்டியன் என்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில்,... மேலும் பார்க்க

ஆழியார் அணையில் யானைக் கூட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

ஆழியார் அணையில் யானைக் கூட்டம் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ஆழியார் ... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!

சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் உள்கூரை (ஃபால்ஸ் சீலிங்) திடீரென விழுந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயி... மேலும் பார்க்க