நெடுஞ்சாலை ஆணையத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா?
அரசு சாரா நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவன லிமிடெட் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னணு சுங்க வசூல் முறையை செயல்படுத்தவும் நிர்வகிக்கிப்பதற்காகவும் மற்றும் நெடுஞ்சாலைகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்தவும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை பயன்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IHMCL/HR/Recruit/01/2025/01
பணி: Engineer(ITS)
காலியிடங்கள்: 49
சம்பளம்: ரூ.40,000 - 1,40,000
தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், மின் கருவிகள், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2025 தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ihmcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.6.2025
மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.